Tuesday 25 September 2012

ஜகதல பிரதாபனின் அனத்தல் டகுல்பாச்சி ஆனது எப்பிடி


சில ஆரம்ப நிலை தெளிவுரைகள் 

கேள்வி :  நான்  ஏன் இந்த  பக்கத்த  படிக்கணும் ?
ஜ பதில் : நாலு பேரு நல்ல இருக்கணும்னா    எதுவுமே தப்பு இல்ல .
யாரு அந்த நாலு பேரு  ?நான் , என் லோக்கல் இன்டர்நெட் கேபிள் காரர், நான்  இம்ப்ரெஸ் பண்ண நெனைக்கற முதல் தமிழ் பொண்ணு , இரண்டாவது தமிழ் பொண்ணு . 



கேள்வி : யார் எல்லாம் இந்த பக்கங்கள படிக்கணும் ?
ஜ பதில் :  GRE , TOEFL , PMP , போன்ற போட்டி தேர்வுகள் எழுதி முன்னேற  நினைக்கறவங்க , கம்பெனி ல அடுத்த டீம் LEAD  ஆக TRY பண்றவங்க  ,IAS பாஸ் பண்ண ட்ரை பண்றவங்க  இன்னும் வாழ்கையில எப்பிடியாவது முன்னேற  நினைக்கறவங்க எல்லாம் அப்பிடியே பஸ் பிடிச்சி ஓடி போய்டுங்க . 
சினிமா, வெட்டி அரட்டை, politics , ஊர் வம்பு , photography , ஊர் சுத்தறது  போன்ற உன்னதமான விசயங்களில் ஆர்வம் உள்ளவர்கள் மட்டும்  மேற்கொண்டு படிங்க !!!!


கேள்வி : ஜகதலப்ரதபனுக்கு என்ன தகுதி  இருக்கு எழுத ?
ஜ பதில் : " சிலபதிகாரம், மணிமேகலை , குண்டலகேசி ,வளையாபதி , சீவகசிந்தாமணி        போன்ற ஐம்பெரும் காப்பியங்கள் எல்லாம்  ஆபரண பெயரில்  அமைந்துள்ளன " ,  போன்ற நல்ல இலக்கண விஷயம் எல்லாம் தெரிஞ்சவன் அப்பிடின்னு எல்லாம் டகுல்பாச்சி விட மாட்டேன்.

இந்த ஒரு தகுதி பத்தாது அப்பிடின்னு நினைக்கும் cid சந்துரு வெல்லாம் கீழ் என்னோட curriculum vitae படிச்சு convince ஆகுங்க 

  • ஸ்கூலில் தமிழ் வாத்தியார் கிட்ட  composition நோட்ஸ் எழுதும் போது அடி வாங்கினவன்                                        - 1995 
  • என் கிளாஸ் பக்கி எல்லாம் இன்ஜினியரிங் படிச்சப்ப ஸ்டைல் a ஆர்ட்ஸ் & சயின்ஸ் காலேஜ் ல சேர்ந்தவன்              - 2003
  • நிறைய figure கிட்ட மொக்கை வாங்கி இருக்கேன்                                                                                                        - 1998 - till date
  •  வார வாரம்  தவறாம்  குமுதம் ,விகடன் ,சினி கூத்து போன்ற கருத்து ஆழமிக்க புக்ஸ் எல்லாத்தையும் படிக்கறவன்    - 1995 - till date
 
இது எல்லாதிலயம்   convince ஆகாத பிரகஸ்பதிகளை சுஜாதா சார் சொல்ற மாதிரி பசித்த புலி தின்னட்டும் .

கேள்வி : இத படிக்கற வாசகனா என்னோட பங்களிப்பு என்ன ? 
ஜ பதில் : மாசா மாசம் எனக்கு ஒரு 10 ,௦௦௦ சந்தா அனுப்புங்க அது போதும்.
அப்பிடின்னு நான் கேட்டா குடுக்கவா போறீங்க ?
 அதனால உங்களுக்கு பிடிச்ச விஷயம் ,போன இடம் , வாங்குன பன்னு , போட்ட சண்டை , பிடிச்ச படம் ,கவர்ந்த மனிதர்கள் , இந்த மாதிரி இன்னும் பல variety ஆன விஷயங்கள் இருந்தா எழுதி அனுப்புங்க இல்ல கமெண்ட்ஸ் போடுங்க , அது என் எழுத்த விட மொக்கை ஆ இருந்த நிச்சயம் இடம் தரேன் .

tail பீஸ் : இந்த வார அனத்தல்

" ஒழுங்கா இருக்கறது எப்பிடின்னு தெரிய ஒழுங்கா இல்லாம இருக்கனும் "

 இதை தான் என் மேனேஜர் 5s  la சொன்னாரு . நாம சொன்ன யாரு கேக்குற!
5s ந என்னங்கிறத  யாராவது படிச்ச புள்ள  கிட்ட கேட்டு தெரிஞ்சுக்குங்க  !!!  

நன்றியுரை 

இந்த ப்ளாக் ஆரம்பிக்க உதவ இரவு முழுவுதும் கண் முழிச்சி என்ன கடிச்ச முட்டை பூச்சிக்கு இந்த ஜகதலப்ரதபனின் அநேக கோடி நமஸ்காரங்கள் .


உங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி :

இந்த வலைதளத்துல எத்தன ஸ்பெல்லிங் mistake இருக்குனு கண்டுபுடிச்சி சொல்றவங்குளுக்கு ஒரு sirapuu பரிசு காத்திருக்குது   !!!;-)